சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை சில படங்கள் வந்துவிட்டன.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் இவர்களது கூட்டணி அமையும் என்கின்றனர்.
அஜித் நடித்த சில படங்கள் வேறு மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. இப்போது அவர் நடித்த வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
சிரஞ்சீவி, அஜித் வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்கின்றனர்.
லட்சுமி மேனன் நடித்த தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்றும் அதற்கான போட்டோ ஷுட் தற்போது நடைபெறுவதாக கூறப்படுகிறது.