18 முதல் 30 வயது வரையிலானவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்பொழுது நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், 18 தொடக்கம் 30 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதற்காக நாற்பது லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் வாரத்தில் நாட்டை வந்தடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.