பிரித்தானியாவில் கடந்த ஐந்து வாரங்களில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 21,952 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோய்த்தொற்றுகள் ஒரு வாரத்தில் 12 சதவிகிதம் குறைந்த பிறகு இங்கிலாந்து இப்போது மூன்றாவது அலையின் உச்சத்தை கடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உயிரிழப்புகளும் ஒப்பீட்டளவில் குறைவாக பதிவாகியுள்ளன.
இன்றைய தினம் 24 கோவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129,743 ஆக உயர்ந்துள்ளது.பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 5,902,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,236,459 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 889 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,536,152 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.