40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மிக அவசியமாகிறது.
படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் நன்றாக கவனித்து ஏதேனும் மாற்றம் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் எல்லா வகையான கண் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறை பிரச்சினை இருக்கிறதா என பரிசோதித்து கொள்ள வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
கண் மருத்துவரால் மட்டுமே கண்டறியப்படும் கண்ணீர் அழுத்த நோய் என்பது கண் பார்வையை சத்தம் இல்லாமல் குறைக்கும் நோய் ஆகும். எனவே Glaucoma நோய் இருந்தால் நமக்கு அறிகுறிகள் தென்படாது. அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
வயது முதிர்வால் ஏற்படும் கண்புரை பொதுவாக அதிக அளவில் கண்ணில் உள்விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின் உள்ள நல்ல பார்வைக்கு கண் நரம்பு எனப்படும் (retina) விழித்திரை முக்கிய பங்கு வகிக்கிறது. retina நன்றாக இருந்தால் நல்ல பார்வை கிடைக்கும்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்து உள்விழி லென்ஸ் பொறுத்திய பின் சில வருடங்கள் கழித்து பார்வை மங்கலாக தெரிந்தால், உடனே கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
கண் மருத்துவத்தை பொருத்தவரை ஆரம்ப கால கண் பரிசோதனையே கண்களை பாதுகாக்க ஒரே வழி ஆகும்.