நடிகை ஓவியாவுக்கு என்ன ஆனது என அவரின் அண்மைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் .
அந்த அளவுக்கு உடல் மெலிந்து, கழுத்தில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார் .
“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா.
விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது.
முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.




















