சாலட், சாண்ட்விச், பீட்சா போன்ற ஏராளமான உணவு பதார்த்தங்களில் காளான் பயன்படுத்தப்படுகிறது. காளானில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.
காளான், பூஞ்சை குடும்பத்தை சேர்ந்தது. ஆனால் அது பூஞ்சையை போல் நோய்த் தொற்றை உருவாக்குவதில்லை. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடியது. வெவ்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்ட பல வகையான காளான்கள் இருக்கின்றன. ஈரப்பத தன்மை மற்றும் உலர்ந்த தன்மை கொண்ட காளான்கள் அதிகமாக மக்களால் விரும்பப்படுகின்றன.
சாலட், சாண்ட்விச், பீட்சா போன்ற ஏராளமான உணவு பதார்த்தங்களில் காளான் பயன்படுத்தப்படுகிறது. காளானில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. காளான்களை சாப்பிடுவதன் அவசியம் குறித்து பார்ப்போம்.
நீரிழிவு நோய்
காளானில் உள்ள நார்ச்சத்து நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வாரத்திற்கு இரண்டு முறையாவது காளான்களை உட்கொண்டால் ரத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதற்கு பதில் காளான்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
புற்றுநோய்
காளான்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.
இதய ஆரோக்கியம்
காளான்களில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். மற்றும் இதய நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விடுபடவும் துணைபுரியும்.
சில காளான்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. எந்த வகையான காளான்களை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து காளான்களின் ஊட்டச்சத்து மதிப்பு அமைந்திருக்கும்.
கர்ப்ப காலம்
தாயின் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்-சேய் இருவரும் உடலளவில் வலிமையாக இருக்கவும் கர்ப்ப காலத்தில் போலிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தேவையை பூர்த்தி செய்யும் தன்மை காளானுக்கு இருக்கிறது. மேலும் காளான்களில் இருக்கும் தியாமின் (பி 1), ரைபோப்ளேவின் (பி 2), நியாசின் (பி 3) மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் (பி 5) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் ஊட்டச்சத்துக்கள் தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. ஆதலால் கர்ப்ப காலத்தில் காளானை தவறாமல் சாப்பிடலாம்.