இலங்கை முழுவதும் இறக்குமதி பால்மா வகைகளிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
நாடுமுழுவதும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள இந்த விவகாரத்தின் பின்னணி தொடர்பாக, யாழ்ப்பாண வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்த விடயம்,
பால்மா தட்டுப்பாடு நிலவுவதற்காக முக்கியமான காரணம், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் டொலர் மதிப்பு அதிகரித்தே காரணமாக கருத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன்பு நிர்யணக்கபட்ட விலையில் தான் இன்னும் பால்மா விற்கப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையின்படி, இப்போது டொலர் விலை மிக அதிகமாக அதிகரித்தது, 200க்கும் மேற்பட்ட தொகையாக இருக்கின்றது.
ஆகையால் இந்த விலையிலேயே பால்மா விலை அதிகரிக்கப்பட வேண்டுமென்று பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தை கோரி கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தற்போதைய நிலையில் பால்மா விலையை அதிகரிக்க வேண்டாம் என்றும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்கள் என அரசாங்கம் பால்மா நிறுவனங்களிடம் கோரியுள்ளது.
இதேவேளையில் குறித்த பால்மா நிறுவனங்கள் முன்பு நிர்யணக்கப்பட்ட விலையில் பால்மாவை மக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலையிலேயே இறப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இறக்குமதிக்கும் பல கட்டுபாடுகளும் போடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.