கொழும்பு மாநகரசபையின் சுகாதாரத் திணைக்களம், நடமாடும் தடுப்பூசி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு 1-15 இல் வசிக்கும் மற்றும் இந்த சிறப்பு சேவை தேவைப்படும் எந்த குடிமகனும் http: //mobilevaccination@colombo.mc.gov.lk இல் பதிவு செய்யலாம்.
அங்கு அவர்கள் பெயர், அடையாள அட்டை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் காரணம் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.
இதன் பின்னர், கொழும்புமாநகரசபை, தடுப்பூசி செலுத்தும் திகதியை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.