யாழ். பருத்தித்துறையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து மதுபானசாலைகள் இரண்டும் மூடப்பட்டுள்ளன.
கிராமக்கோட்டு சந்தி மற்றும் ஆனைவிழுந்தான் – புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானசாலைகளே இவ்வாறு 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவ்விரண்டு மதுபானசாலைகளிலும் வேலை செய்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.