உருமாறி வரும் வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் சவாலாக அமையாது என வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜனாகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் உருவாகக்கூடிய நிலைமாறிய வைரஸ்கள், தற்போது கட்டங்களாக தடுப்பூசியைப் பெற்று முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று உத்தரவாதமளிக்க முடியாது.
எனவே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்வடர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.