இலங்கையில் பரவும் கொவிட் தொற்றின் அவதானமிக்க நிலைமை கருத்திற் கொண்டு சுகாதார கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு சுகாதார பிரிவுகள் நடடிக்கை எடுத்துள்ளன.
தற்போது மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்துவதற்கும், திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 50 பேராக குறைப்பதற்குமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதிர்வரும் காலப்பகுதியில் மசாஜ் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்தை குறைப்பதற்காக பேருந்துகள் மற்றும் ரயில்களில் அழைத்து செல்லப்படும் எண்ணிக்கையை நூற்றுக்கு 50வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.