ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.
தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.