யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினால் கைதுசெய்யப்பட்ட மூவரின் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 4 கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.