வவுனியாவில் இருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும், அம்பலாங்கொடவல பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர் .