மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மட்டு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்யவந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள அவரை பிடித்து கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்கு வரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவில் சாரதியாகபணியாற்றும் அம்பாறை கோமாரியைச் சேர்ந்த குறித்த நபர் மட்டக்களப்பில் தங்கியிருந்து கடமையாற்றி வருவதாகவும் அவருக்கு நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை வீட்டில் பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தினர்.
எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் இன்று குறித்த சாரதி தனிமைபடுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பு பொது சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்ய வந்த நிலையில் அவரை இனம் கண்ட பொது சுகாதா பரிசோதகர்கள் பிடித்து கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.