நாட்டில் தற்போது குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குருதியை வழங்க முன்வருமாறு தேசிய குருதி மாற்றல் சேவை மையம், பொதுமக்களைக் கோரியுள்ளது.
குருதிக் கொடையாளிகள் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கும், குருதி வழங்கல் மத்திய நிலையங்களுக்கும் சென்று குருதி வழங்க முடியும் என தேசிய குருதி மாற்றல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 011 533 2153 அல்லது 011 533 2154 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.