இராணுவச் சீருடையில், இராணுவ வாகனத்தில் வந்த 10 இற்கு மேற்பட்டவர்கள் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நள்ளிரவு 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது, சம்பவ இடமானது மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியிருந்தது.
படைச் சீருடை அணிந்திருந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நின்றனர், அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மக்களைத் தாக்கியமை தொடர்பில் பொது மகன் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்ட போது இராணுவச் சீருடை அணிந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து படைச் சீருடை அணிந்தவர்கள் ஓடித்தப்பியுள்ளனர்.
12 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் இதுவரை பொலிஸார் வருகைதரவில்லை அப்பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.