கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வரும் ஒரு தாய் தனது ஒரே மகள் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்று காரணமாக தன்னை மினுவாங்கொட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தான் இப்போது குணமடைந்து வருவதால் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மகள் மறுப்பதாகவும் அவர் கூறினார்.
தலவத்துகொடவில் வசிக்கும் 55 வயதான தாயார் தம்மிகா ஜெயவீரா, தனது மகளின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
கடவுளே எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். என் மகளின் பெயர் நிலுஷா நில்மினி. நான் வீடு கட்ட நான்கரை லட்சம் கொடுத்தேன். இப்போது எனக்கு வீடு இல்லை, பணம் இல்லை. செல்ல எங்கும் இல்லை என அவர் கவலையுடன் தெரிவித்தார்.