போலி ஆவணங்களை வைத்து வைத்தியரான இளம்பெண் சிக்கினர்! மாத்தறை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து , 2 வருடங்களாக வைத்தியராக பணிபுரிந்த இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையே இவ்வாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை, பலதுவ பகுதியை சேர்ந்த அந்த பெண், மருத்துவராகும் கனவுடன் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பாடத்தில் இரண்டு முறை தோற்றினார். எனினும், சித்தியடையவில்லை.
எப்படியாவது மருத்துவராக வேண்டுமென்ற குறிக்கோளுடைய அந்தப் பெண், கடற்படையில் பணியாற்றும் போது 2012 இல் கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் சேர்ந்தார். அது கடற்படையின் கீழ் இருந்தது. சில வருடங்கள் அவர் அந்த பீடத்தில் படித்தார். எனினும், 2015 இல் இரண்டாவது தேர்வில் தோல்வியடைந்தார்.
பின்பு போலி சான்றிதழ்களை கடற்படை தலைமையகத்தில் சமர்பித்து சில வருடங்கள் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர் சமர்பித்த ஆவணங்களில் சந்தேகமடைந்து, அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அந்த அதிகாரி போலி கல்வி சான்றிதழ் தயாரித்தது தெரியவந்த நிலையில் அவர் கைதாகியுள்ளார்.