காபூல் நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்குள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் விமானங்கள் மூலம் வெறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது.
இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு. பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த நாடு. புகலிடம் மிகவும் முக்கியமானது’ என கூறினார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் தலைநகர் காபூலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.