ஆப்கானிஸ்தானிலுள்ள 86 இலங்கையர்களில், இதுவரை 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
‘இன்றைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும், எஞ்சிய 20 பேர் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தலிபான்கள் நாட்டை பிடித்த போது, காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும் 3 இலங்கையர்கள் இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது