ஹைதராபத்தில் படத்தில் நடித்துவிட்டு மும்பை திரும்பியபோது பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தாரையும் காத்துக் கொள்ள அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தி வந்தவர் நதியா. இவர் மே மாதம் தான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும், என்னோட அப்பா, அம்மா, வீட்ல வேலை செய்றவங்கனு நாலு பேருக்கு தொற்று நோய் இருக்கிறது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என நடிகை நதியா தெரிவித்துள்ளார்.