ஆலய சூழலில் உள்ள அடியவர்கள் உளப்பட அனைவர்க்கும் நீராவி பிடிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நீராவி பிடிப்பதற்கான வசதிகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் செல்வச்சந்நிதி கலா மன்றத்தினரால் ஆலய சூழலில் உள்ள முதியவர்கள் மற்றும் அடியவர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஆவி பிடிப்பதற்குரிய ஒழுங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


















