கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் நீரிழப்பைத் தடுப்பதற்காக தினமும் இரண்டு லீற்றர் தண்ணீர் பருக வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஊட்டச்சத்து பேராசிரியர் டொக்டர் ரணில் ஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானோர், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் சுவை இல்லாமை ஆகிய அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் உட்பட சிறிதளவு காய்ச்சல் உள்ள நோயாளிகளால் தண்ணீர் குடிப்பதற்கு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான நபர்கள் உணர்வுபூர்வமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஒருவர் தண்ணீர் குடிக்கும் பதிவை வைத்திருப்பது நீர் உட்கொள்ளலை கண்காணிக்கும் ஒரு முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போதுமான விற்றமின்களை எடுத்துக் கொண்டால், அது சிறுநீரின் நிற மாற்றத்துக்கு பங்களிக்கும் என்றும் அது விதிவிலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒருவரின் சிறுநீரின் நிறத்தின் மூலம் போதுமான அளவு தண்ணீர் குடித்திருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்ததோடு, போதுமான அளவு தண்ணீர் உடலில் சேர்ந்திருந்தால் தெளிவான சிறுநீர் வெளியேறும் என்றும் தெரிவித்தார்.