தமிழ் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி. பிக் பாஸ் மூலமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
விஜய் உடன் லியோ படத்தில் ஒரு சின்ன ரோலில் ஜனனி நடித்து இருந்தார். அதன் பிறகு தற்போது நிழல் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
நிழல் பட ஷூட்டிங்கில் விபத்து
இந்நிலையில் தற்போது நிழல் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் ஜனனி காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், காலில் பெரிய கட்டுடன் ஜனனி நடக்க முடியாமல் வந்திருக்கும் காணொளி, ஜனனி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.