விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விற்பனைக்கு வந்தது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய விவோ வை33எஸ் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11 கொண்டிருக்கும் விவோ வை33எஸ் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ வை33எஸ் அம்சங்கள்
– 6.58 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
– 50 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 17,990 ஆகும்.