தலிபான்களுக்கு பெண்களிடம் எப்படிப் பழகுவது எப்படிப் பேசுவது என்றே தெரியாது என தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் உள்ள மக்கள் யாரும் காபூல் விமான நிலையம் செல்ல தலிபான்கள் தடைவிதித்துள்ளனர் .
இந்த நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித், எங்கள் பாதுகாப்புபடைகளுக்குப் பெண்களுடன் எப்படிப் பழகுவது, பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் வரை பெண்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




















