யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வால்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (23) குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குறித்த இளைஞனை கொலை செய்த கும்பலை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
2 அல்லது 3 வருடங்களின் முன் நத்தார் பண்டிகை சமயத்தில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக இரண்டு தரப்பிற்கிடையில் அடிதடி மோதல் நடந்தது. கெமி குழுவினர் அட்டகாசம் செய்தபோது, ஜெரன்ஸனும் சிலரம் அவர்களை தாக்கியுள்ளனர்.
முக்கியமாக அந்த குழுவின் தலைவனான கெமியை, ஜெரன்ஸ் தாக்கியுள்ளார். இதுதான், இந்த கொலைச்சம்வத்தின் மூலக்கதை. அன்று தொடக்கம் ஜெரன்ஸை பழிவாங்கும் இரத்த வெறி. கெமி குழுவிடம் இருந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த இளைஞனை ரெளடிகள் திட்டமிட்டு தாக்கியுள்ளார். இதில் அவரின், தலை முதல் பாதம் வரை வாளால் வெட்டியுள்ளனர். பாசையூரை சேர்ந்த கெமி என்ற ரௌடிக்குழுவே இந்த குற்றச்செயலில் தொடர்புபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பொலிசாரிற்கு கிடைத்த தகவல், சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக கெமி குழுவினர் தலைமறைவாகி விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.