காதலர்கள் குதூகலமாக இருக்க ஆணுறைக்கு பதில் விபரீதமான ஒரு பொருளை தடவியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் மிர்சா(25). இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி தன் காதலியுடன் ஜூஹாபுரா(22) பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது காதலர்கள் தனிமையில் போதைப் பொருட்களையும் உட்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன்பின்னர், போதையில் இருந்த காதலர்கள் இருவரும் மனம் ஒத்துபோனதால், உறவு வைத்துக்கொள்ள நினைத்துள்ளனர். அப்போது தான் பாதுகாப்புக்கு ஆணுறை கொண்டு வரவில்லை என்பதால், ஆணுறைக்கு பதில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ஆணுறைக்கு பதில் ஹோட்டலில் இருந்த பிசினை தடவிகொண்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மயத்துடனே ஹோட்டல் அறையை காலி செய்து இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் இந்த இளைஞரோ சாலையில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்துக் கிடந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி இளைஞருக்கு தெரிந்த நபர் ஒருவர் மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், சல்மானின் உடல்நிலை மிகவும் மோசமானதாக மாறியதால், அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சல்மான் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் தனது ஆணுறுப்பில் தடவிய பிசின் அவரது உடல் நிலையை மோசமடைய வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.