மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த சிறப்பு மத நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. விகாரையின் தலைமை விகாராதிபதி உள்ளிட்ட ஆறு துறவிகள் மத சடங்குகளை நடத்தியிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வுக்குப் பின்னர் ஊடகங்களுக்குப் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினரும் நெருங்கிய நண்பருமான மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
மங்கள சமரவீர தனக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், நேரடியாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அரசியல்வாதி என்று மைத்திரிபால கூறினார்.
ஊழல் இல்லாத அவரைப் போன்ற நாட்டுக்குத் தேவையான ஒரு அரசியல்வாதியை இழந்ததற்கு அவரது நண்பர்களாகவும் ஒரு கட்சியாகவும் நாங்கள் வருந்துகிறோம் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மூத்த துணைத் தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.