இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மலேசியா, தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதிகளை வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 20 ஆம் திகதி நிலவரப்படி, மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 96,809 புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று மலேசியாவின் குடிவரவுத் துறை துணைபணிப்பாளர் டத்தோ மக்சான் மஹ்யுதீன் இன்று தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில் 174,068 சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தோட்ட, விவசாயம், கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலைகளுக்கு அமர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதி வழங்கப்படும் என்று மக்ஸான் கூறியுள்ளார்.