இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கு இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி குறித்த கால எல்லையானது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.