உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் பல துறைகளில் கவனம் செலுத்தி வந்தார்.
ஆரம்பத்தில் காதல் படம், நடனம் ஆடிவிட்டு செல்வது என சாதாரண படங்களாக நடித்துவந்த அவர் பின் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் இப்போது அரசியலில் ஈடுபட்டு முழு கவனத்தை அதில் செலுத்தி வருகிறார்.
இப்படி உதயநிதி நடிப்பு, அரசியல் என செல்ல அவரது மகன் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாட்டில் உள்ளார்.
உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருக்கிறார்.




















