புதிதாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நடிகை ஜோதிகாவை இதுவரை 1.2 மில்லியன் இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின்னர் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.
தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதுவரை எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தாமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தனது முதல் பதிவாக மலை உச்சியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜோதிகா, அது சுதந்திர தினத்தன்று இமயமலையில் மலையேற்றம் சென்றபோது எடுத்த புகைப்படம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகை ஜோதிகாவை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram