பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ந்த பார்ட்டியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். நடிகர் தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலை பாடகி தீ உடன் இணைந்து பாடினார். அதேபோல் நடிகர் சிம்பு ‘வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலை பாடி யுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன