நடிகர் ஆர்யா ஜெர்மனி நாட்டை சேர்ந்த இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறுபடியும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார். இதில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை நாட்டை சேர்ந்த இளம்பெண் விட்ஜா என்பவர் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் அவரின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து நடிகை நடிகர் ஆர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இலங்கை பெண் விட்ஜா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து உடனே பதில் அளிக்குமாறு சைபர் குற்றப்பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டது. உத்தரவின் அடிப்படையில் ஆர்யாவிடம் கடந்த 10ஆம் திகதி பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக வீடியோ கால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இலங்கை பெண்ணிடம் சைபர் கிரைம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்தே நடிகர் ஆர்யா என்ற பெயரில் மாறுவேடத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அா்மான் (32), முகமது ஹூசைனி பையாக் (34) என்பவர்கள் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், பண மோசடி புகாரில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பு இல்லை என காவல்துறையில் கூறப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெர்மனியை சேர்ந்த அந்த இலங்கைப் பெண் நடிகர் ஆர்யா மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ஆர்யா விடமும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடிகர் ஆர்யா மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.