கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கோவிட் வைரஸினால் உயிர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.