பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சிறந்த தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் எடுத்துரைத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.