கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார் (25). இடுக்கியில் உள்ள கரடிக்குழியில் வயதான ஒருவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் வேலை பார்க்கும் ஒருவரின் மகளை சுனில் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இதனையடுத்து, சுனில் குமார் அந்த பெண்ணிடம் பலமுறை தன்னுடைய காதலை எடுத்து கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண் விரும்பவில்லை. இதனால் அவர் அடிக்கடி அந்த பெண் போகும்போதும், வரும்போதும் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னை காதலிக்குமாறு அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் அவரை நிராகரித்து வந்துள்ளார். இதனால், சுனில் கடுமையாக கோபமடைந்தார். அந்த பெண்ணின் வீட்டிற்குள் கடந்த செவ்வாய்கிழமையன்று சுனில் சென்றுள்ளார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த கத்தரி மூலம் அந்த பெண்னின் கூந்தலை வெட்டுவதற்காக துரத்தி கொண்டு ஓடியுள்ளார்.
அவர் தன்னை துரத்துவதை பார்த்த அப்பெண் அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால், சுனில் குமார் அந்த பெண்ணை பிடித்து அவரின் தலை முடியை துண்டு துண்டாக வெட்டி வீசினார். இதனால், அப்பெண் அழுது கொண்டே அங்குள்ள காவல் நிலையம் சென்றுள்ளாள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சுனில் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.