வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நடிகர் சசிகுமார் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார். நல்லமனம் வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.