இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான சாபீர் அப்பாஸ் குலாம்ஹ_செய்னை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதி சாபீர் அப்பாஸ் கொழும்பில் அமைந்துள்ள அவரது காரியாலய வளாகத்தில் இருந்திருந்தார். எடம் எக்ஸ்போ உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களின் உரிமையாளரான சாபீர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கடந்த 2019ம் ஆண்டில் சாபீரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டது. இந்த பிரதேப் பரிசோதனையின் போது குறித்த நபரின் மரணம் இயற்கையானது அல்ல எனவும் இது கொலை எனவும் மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
விரிவான விசாரணைகளின் பின்னர் சாபீரின் இளைய புதல்வரான 37 வயதான அலி குலாம்ஹ_செயனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.