இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்தது. எனினும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு உள்ளநிலையில் திருகோணமலையில் கடமையாற்றிய சிங்கள மொழி பேசுபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தின் தலையீட்டுடன் நிகழ்ந்ததாக, வடமாகாண இ.போ.ச தொழிற்சங்கங்கள் பல குற்றம்சாட்டியுள்ளன.