ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல முக்கிய நட்சத்திரங்களின் பெயர்களும் தற்போது உத்தேச பட்டியலில் உள்ளதாக கூறப்படும் நிலையில், செம்பருத்தி சீரியல் பிரபலம் ப்ரியா ராமன் கல்லந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது.
அதோடு நடிகை ஷகீலாவின் மகள் மிலா, சீரியல் நடிகை பாவனி ரெட்டி, சூசன் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளப்போகிறார்கள் என கூறப்படுகின்றது. இந் நிலையில் தற்போது சர்ப்ரைசாக செம்பருத்தி சீரியலில் அதிகடவூர் அகிலாண்டேஸ்வரியாக நடித்து வரும் நடிகை ப்ரியா ராமன் தான் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் பரவி வருகிறது.
ப்ரியா ராமன் கடந்த பல வருடங்களாக செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார் . அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. எனினும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செபருத்தியில் அகிலா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளது. ப்ரியா ராமன் செம்பருதியில் நடித்துக்கொண்டே விஜய் டிவியின் செந்தூர பூவே சீரியலில் நடித்து வந்தார்.
செந்தூர பூவே சீரியலில் ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சித் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவாகரத்து ஆன அவர்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கும் நிலையில் தான் சீரியலில் ஒன்றாக நடித்து வருகின்றனர்.
ப்ரியா ராமன் வேறு டிவிக்கு சென்றதால் தான் செம்பருத்தியில் அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி அவர் செம்பருத்தியை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் உறுதிப்படுத்தாத செய்திகள் கடந்த சில தினங்களாக பரவி வரும் நிலையில் பிக் பாஸில் அவர் பங்கேற்கிறார் என்கிற செய்தியும் வர தொடங்கி இருக்கிறது.