மாத்தளை மாவட்டம், பெலிகமுவ பிரதேசத்தில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இரு லொறிகளின் சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் லொறியொன்றின் சாரதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே உயிரிழந்துள்ளார்.