கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் குடிவரவு குடியகல்வு திணைக்கள கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவை இடம்பெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது