இசையமைப்பாளர் இளையராஜா இவரை கொண்டாடாத மக்களே இல்லை. எவ்வளவோ ஹிட் பாடல்கள் வந்திருக்கலாம், வரலாம் ஆனால் இளையராஜாவின் பாடல்கள் எப்போதுமே அழியாததாகும்.
இப்போது உள்ள இளைஞர்களும் அவரது பாடல்களுக்கு அடிமை. இன்றைய காலகட்டத்தில் அவர் அதிக படங்கள் இசையமைப்பது இல்லை, மீண்டும் அவர் நிறைய பாடல்கள் இசையமைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை.
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் இளையராஜா ராஜபார்வை என்ற பெயரில் சன் தொலைக்காட்சியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறாராம்.
இப்போதைக்கு இந்த தகவல் தான் வந்துள்ளது, மற்றபடி நிகழ்ச்சி குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.




















