பொதுவாக உலக வாழ் மக்களின் பாரம்பரிய உணவாக அரிசி உள்ளது. இங்கு மக்கள் பலரால் தினமும் அரிசி உணவு இல்லாமல் அவர்களின் உணவு முழுமை அடையாது.
நாளைக்கு ஒரு முறையாவது அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடையே உள்ளது.
இருப்பினும் மாறிவரும் காலநிலை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அதிகமான விளைச்சல் தேவைப்படுவதனால் செயற்கை விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் உண்ணும் உணவானது ரசாயனத்தின் கலவையாக மாறியுள்ளன.
குறிப்பாக அரிசியை சரியாக சமைக்காதபோது அதனால் நமது உடலுக்கு உபாதைகள் ஏற்படலாம். அந்தவகையில் அரிசியை ஊறவைக்கமால் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆய்வு
இங்கிலாந்தில் மேற்க்கொண்ட ஒரு ஆய்வில் நாம் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள இராசயனமானது அரிசியை ஆபத்தானதாக மாற்றுகிறது.
இது சில சமயங்களில் அரிசிகளில் ஆர்சனிக் விஷத்தை உண்டாக்கிறது. இதனால் அரிசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவாக மாறுகிறது என கூறப்படுகிறது.
ஆர்சனிக் என்பது பல்வேறு கனிமங்களில் இருக்கக்கூடிய ஒருவகை இரசாயனமாகும். இது விவசாயத்தில் அல்லது மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் காணப்படுகிறது.
பூச்சிக்கொல்லிகளின் முக்கிய பகுதியாக இந்த ஆர்சனிக் உள்ளது. உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போது அவற்றை விஷமாக்கும் தன்மை கொண்டது.
இதனால் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். அதிகப்பட்சமாக இதனால் இதயத்தில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ஆர்சானிக் நாம் உண்கிற அரிசியில் அதிகமாக உள்ளது. எனவே சரியான முறையில் அரிசியை நாம் கழுவி சமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் உடல் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அரிசியை ஊறவைத்து நன்றாக சுத்தம் செய்து அதனை கழுவி சாப்பிடுவது நல்லது.