வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிக்கு கட்டுப்படாத கொரோனா மாறுபாடு நுழைந்துவிட்டால் பிரித்தானியாவில் மீண்டும் முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice கூறுகையில், பயண விதிகளை மாற்றுவது தொடர்பில் அமைச்சர்கள் இன்று சந்தித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள்.
தற்போது வரை அமுலில் உள்ள கடுமையான விதிகள், கவலைக்குரிய சத்தியமான மாறுபாடுகளிலிருந்து நமக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளன. போக்குவரத்து துறைக்கு இது உண்மையிலேயே மிக மிக கடினமான நேரம், நாங்கள் அதை முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
அதனால் தான் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, முடிந்த வரை விரைவாக கட்டுப்பாடுகளை குறைக்கிறோம்.
சமாளிக்க முடியாத கொரோனா மாறுபாடு நாட்டிற்கு நுழைந்துவிடும் என்பதே போக்குவரத்து துறைக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், அப்படி நுழைந்துவிட்டால் பிரித்தானியாவில் மீண்டும் முழு பொது முடக்கம் அமுலுக்கு வரும்.
அதை நாங்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக தான் நாங்கள் எச்சரிக்கையாக படி படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஏனெனனில் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் திரும்பப்பெற முடியாததாக இருக்க வேண்டும் என George Eustice தெரிவித்துள்ளார்.