கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் வசதியினை பெற்றுள்ள பொது மக்கள் தங்கள் மாதாந்த நீர் பட்டியல் கொடுப்பனவுகளையும் நிலுவை கொடுப்பனவுகளையும் தாமதமின்றி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவிக்கையில்,
தற்போதைய முடக்க நிலை மற்றும் கோவிட் தொற்றினை கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளைப் பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும் எனவும் அதற்காக வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments எனும் எமது இணையத்தளத்திற்குச் சென்று தன்னியக்க பணபரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாகக் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ள முடியும்.
பொது மக்கள் தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை, கட்டணங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாகக் கட்டணங்களையும் செலுத்திக்கொள்ள முடியும்.
மேலும் பொது மக்களின் நலன் கருதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் 155 ஆம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்திலும் இம்மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம் நீர்ப்பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மேற்படி முகவரியில் அமைந்துள்ள எமது காரியாலயத்திற்கோ, அல்லது 021 2283981 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.