ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வு எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 22 ஆம் திகதி உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளதாகவும், அமர்வின் போது ஜனாதிபதி பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.